Thursday, April 26, 2018

Beauty Is A Wound - Eka Kurniawan


வெகுநாட்களாக வாசிக்க வேண்டுமென்று நினைத்த புத்தகம். நூலகத்தில் பார்த்தவுடன் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முதல் வரியை வசித்தவுடன் நான் சொன்னது  "wow". உடனே அருகிலிருந்த என் மகள் என்னப்பா என்னாச்சு ? என்று கேட்டால் . அதற்கு நான் " One afternoon on a weekend in March, Dewi Ayu rose from her grave after being dead for twenty-one years" என்ற முதல் வரியை வாசித்தேன் . அதற்கு அவள் " பேய் கதையாப்பா ?" என்று கேட்டால் நானோ படித்து முடித்த பிறகு சொல்கிறேன் என்று சொல்லி விடாமல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வசித்து ஒரு வாரத்தில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன் .
Every human is a mammal, just like a dog, and walks on two legs like a chicken.
 இந்த கதை எந்த genre  என்று கேட்டால் எந்த வகையையும் சார்ந்தது அல்ல என்றுதான் சொல்ல வேண்டும் . அனைத்தும் கலந்தது. கேப்ரியல் மார்க்கெஸ் எழுதிய " நூற்றாண்டு கால தனிமை " போல ஒரு குடும்பத்தின் வரலாறை சமகால நிகழ்வுகளோடு சொல்கிறது . மற்றொரு பக்கம் இந்தோனேசியாவின் வரலாறை சொல்லும் கதை என்றும் சொல்லலாம்.  தேவி அயு இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுகிறாள் .இது அவளின் கதை.
If I might share my opinion, this world is hell, and our task is to create our own heaven.
தேவி அயு டச் மற்றும் இந்தோனேசிய வம்சவழியில் பிறந்தவள். உலகப் போரின்போது ஹாலந்திற்கு செல்ல வாய்ப்பு அமைந்தும் செல்லாமல் இந்தோனேசியாவிலேயே இருக்கிறாள். அவள் வசித்த ஊரிலேயே அழகானவள் என்று பெயர்பெற்றாள்.சந்தர்ப்பச் சூழ்நிலையால் விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகிறாள். முதலில் பிடிக்காவிட்டாலும் பிறகு அதுதான் வாழ்க்கை என்றதும் தனக்கென்று ஒரு வழியை அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்கிறாள் .  அந்த ஊரில் அவளோடு உறவு கொள்ள ஆண்கள் ஏதும் செய்ய தயாராக இருந்தார்கள். அதனாலேயே அவள் மற்ற பெண்களால் வெறுக்கப்பட்டாள்.  ஒவ்வொன்றாக மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்றுக்கும் வெவ்வேறு தகப்பன்கள்.  மூன்றும் பெரும் அழகிகளாக வளர்ந்தன. 
Communism was born from a beautiful dream, the likes of which there will never be again on the face of this earth: that there would no longer be lazy men who eat their fill while others work hard and starve.
ஒருத்தியின் கணவன் ஊர் முரடன் (preman) ,இன்னொருத்தன் இராணுவ வீரன் மற்றும் முன்னாள் கொரில்லா படை தளபதி மற்றொருத்தன் கம்யூனிஸ்ட்.  அன்பு மற்றும் பழிவாங்குதல் தான் இந்த கதையின் பிரதானம். தேவி அயுவின் தாய் அன்பு. அவள் தனது மகள்கள் அனைவரையும்  மிகவும் அன்பு செய்கிறாள். மகள்களின் கணவர்களோ ஒருவரை ஒருவர் பழிவாங்குவதில் கவனமாக இருக்கிறார்கள். உண்மையில் பழிவாங்குதல்தான் கதையை  நகர்த்திச்செல்கிறது.  ஒரே ஒரு வருத்தம்  கதையில் வரும் அனைத்து பெண்களையும் ஏதோ  ஒரு  உடல் சம்பந்தமான பொருளாக ஆசிரியர் சித்தரிப்பதுதான்.

இந்தக் கதை பல வன்முறைச் சம்பவங்களை கொண்டுள்ளது. பல கொடூர கற்பழிப்புகள் படுகொலைகள் சர்வசாதாரணமாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபச்சார விடுதியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் கம்யூனிச படுகொலைகள் . ஒன்று ஜப்பானியர்களால் மற்றொன்று புதிய சுதந்திர அரசால் . மற்றொரு பார்வையில் இந்த பெண்களின் வாழ்க்கைதான் இந்தோனேசியாவிற்கும் நடந்தது என்று எடுத்துக்கொள்ளலாம் .
You don't need to belong to one another in order to love one another.
மிகவும் எளிய பல இடங்களில் "காமிக் " மாதிரி மொழி நடை. அற்புதமான மொழிபெயர்ப்பு . கதையில் பல இடங்களில் மஹாபாரத மற்றும் இராமாயண கதாப்பாத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  பல சம்பவங்களை சாதாரண மொழியில் கூறிச் செல்வது இக்கதைக்கு பெரும் பலம். மற்றொரு முக்கியமான அம்சம் நகைச்சுவை. வாசர்கள் கண்டிப்பாக வெடித்துச் சிரிக்கலாம். நான் பல இடங்களில் சிரித்தேன். அது தான் மேஜிக்கல் ரியலிசம் - கதையில் ஏதும் நடக்கலாம் .

என் மகள் கேட்ட கேள்விக்கு பதில் "இது ஒரு பேயின் கதை அல்ல . பல பேய்களின் கதை".   கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கிளாசிக் .

No comments:

Post a Comment

welcome your comments