It is in hearing the voice of the Devil that we can better appreciate the voice of Godநான் டான் பிரௌனின் ராபர்ட் லாங்டன் நாவல்களின் பெரிய ரசிகன். அதற்கு முக்கிய காரணம் டான் பிரௌன் எடுத்துக்கொள்ளும் கதைக்களம் -கிறிஸ்தவம் மற்றும் புது புது ரகசிய அமைப்புகள். அனைத்து ராபர்ட் லாங்டன் நாவல்களுமே ஒரே கதை வடிவத்தைக் (same template)கொண்டதே. ஒரு ரகசியம் ,ஒரு கட்டிடம் (கிறிஸ்தவ ஆலயம் அல்லது அருங்கட்சியகம் அல்லது இரண்டும் ), வார்த்தை விளையாட்டு ,ஒரு அடியாள் மற்றும் ராபர்ட் லாங்டன் துணைக்கு ஒரு அழகான பெண் இவை அனைத்தும் இப்புத்தகத்தில் உள்ளது.
1.நாம் எங்கிருந்து வந்தோம் ?
2.நாம் எங்கே செல்கிறோம் ?
இந்த கதை இந்த இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றுள்ளது. ராபர்ட் லாங்டன் தனது நண்பனின் (எட்மண்ட் கிறிஸ்ச் ) அழைப்பை ஏற்று ஸ்பெயின் வருகிறான். எட்மண்ட் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட இருப்பதாகவும் அது மிக பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துமென்றும் அதற்கு லங்கிடனின் ஆலோசனை தேவையென்றும் கூறுகின்றான். அறிவிப்பை வெளியிடுவதற்கு சற்று முன் எட்மண்ட் கிறிஸ்ச் கொல்லப்படுகிறான் . யார் அவனைக் கொன்றது ?அந்த அறிவிப்பு வெளியானதா ? இது தான் கதை.
We comfort our physical bodies in hopes our souls will follow.இந்த கதையில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் வின்ஸ்டன் -இது ஒரு செயற்கை கம்ப்யூட்டர் உதவியாளர் (Artificial Intelligence) . தற்போது வின்ஸ்டன் மாதரி எனக்கு தெரிந்து எந்த மென்பொருளும் ரோபோட்டும் இல்லை ஆனால் விரைவில் உருவாக்கப்படும். என்னை கவர்ந்த மற்றொரு விசயம் கதை நடக்கும் இடமான பார்சிலோனா . பார்சிலோனா கால்பந்து அணியின் பெரிய ரசிகன் நான் .அங்குள்ள புகழ்பெற்ற இடங்கள் அனைத்தும் எனக்கு தெரியும் அதனால் கதையை காட்சியாக காண்பதில் எந்த சிக்கலும் இல்லை. காசா மிலா(Casa Mila), சக்ராட பெமிலியா (Sagrada Familia) , Guggenheim museum , valley of the fallen மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் வருகிறது.
Remember death. Even for those who wield great power, life is brief. There is only one way to triumph over death, and that is by making our lives masterpieces. We must seize every opportunity to show kindness and to love fully.இந்த கதையில் ராபர்ட் லாங்டனின் தனித்திறன் வெளிப்படுவது மிக குறைவே. ஒரே ஒரு இடத்தில் நாம் vintage ராபர்ட் லாங்டனை பார்க்கலாம் அது அவர் 47 எழுத்துக்களுள்ள பாஸ்வேடை (password) கண்டுபிடிக்கும் போது. அவருக்கு உதவியாக வரும் வருங்கால ஸ்பெயினின் ராணி அம்ப்ரா விடால் (Ambra Vidal ) மூலம் ஸ்பெயினின் கத்தோலிக்க வரலாற்றையும் மாறும் இளம் தலைமுறையையும் ஆசிரியர் சிறப்பாக விளக்குகிறார்.
The most self-righteous in life become the most fearful in death.மற்ற ராபர்ட் லாங்டன் நாவல்களைவிட இது சற்று மாறுபட்டது - இதில் சஸ்பென்ஸ் மற்றும் புதிர்கள் குறைவு மாறாக அறிவுசார் விசயங்களை பேசுகிறார் ஆனால் மத எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை சொல்லப்போனால் மத எதிர்ப்பு அதிகமாகவே இந்த புத்தகத்தில் இருக்கிறது. எழுத்து நடையில் எந்த சிறப்பும் இல்லை ஆனால் வாசிக்கலாம்.
No comments:
Post a Comment
welcome your comments