இரண்டு வாரங்களுக்கு முன்பு என் மகள் என்னிடம் நீங்கள் வாசித்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த fiction எது என்று கேட்டாள். நான் ஒரே ஒரு புத்தகத்தை சொல்வது கடினம் என்றேன். அதற்கு அவள் அப்போ உங்களுக்கு நாற்பது வயதாகப் போகிறது அதனால் நாற்பது புத்தங்கள் சொல்லுங்கள் என்றாள். சரியென்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் நாற்பது தமிழில் நாற்பது என்றேன் .
சிறு வயதிலிருந்தே அப்பா மூலம் வாசிப்பினுள் நுழைந்தேன். அப்போது எங்கள் ஊரில் நூலகம் இருந்ததே எங்களுக்குத் தெரியாது. சிறுவர்மலர் வாரமலர் எப்போதாவது ஆனந்தவிகடன் அவ்வளவுதான். ஆனால் தினமும் பேப்பர் வாசிப்போம். அந்த பழக்கம்தான் பின்னாளில் புத்தக வாசிப்பிற்கு இழுத்துச் சென்றது.பாம்பன் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு பள்ளிப் படிப்பிற்கு சென்றபோது கடைகளில் பார்த்த புத்தகங்களால் ஒருவித ஆர்வம் தோன்றியது. அந்த ஆர்வத்தை இன்றுவரை அணையாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். புத்தகங்களை தேடிச் சென்று வாங்கி வாசிப்பது அப்போது ஆரம்பித்தது. அப்பா புத்தகம் வாங்குவதற்கென்றே தனியாக பணம் தருவார். சென்னையிலிருந்து கல்லூரி படிப்பிற்கு கோவை சென்றபோது தான் முதல் முறையாக தமிழ் நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது.
கீழேயுள்ள புத்தகப் பட்டியலில் பெரும்பான்மையான புத்தகங்கள் நான் சிங்கப்பூர் வந்த பிறகு வாசித்தவை. அதிலும் பெரும்பான்மையான புத்தகங்கள் சிங்கப்பூர் நூலங்களில் இன்றும் உள்ளன. "The Divine Comedy - Dante " இந்த புத்தகத்தை வருடந்தோறும் நான் வாசிக்கிறேன்.என் படுக்கை அறையில் எப்போதும் இருக்கும் புத்தகம் இது. என் சிந்தனையை மாற்றிய புத்தங்களில் முக்கியமானது "The Stranger - Albert Camus". மூன்று முறை வாசித்திருக்கிறேன். பல கேள்விகள் இன்னும் இருகின்றன."Crime and Punishment by Fyodor Dostoevsky" இந்த புத்தகத்தை முதல் முறை ஒரு பயணத்தின்(சிங்கப்பூர் -சென்னை-விஜயவாடா -சென்னை -பாம்பன் -சென்னை -சிங்கப்பூர் ) போது வாசித்தேன். அபூர்வமான அனுபவம். அதற்குப் பிறகு இந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்திருக்கிறேன் . Invisible Cities - Italo Calvino சில மணித்துளிகளில் வாசித்து முடித்தேன். அபாரமான படைப்பு.Italo Calvino கதை சொல்லும் தாத்தா போல. Gabriel Garcia Marquez -ன் One Hundred Years Of Solitude நாவலை ஒரு வாரத்திற்கு மேலாக வாசித்தேன். இந்த நாவலை மறக்க முடியாது. சென்ற மாதம் காலமான என் பெரியப்பாவிடம் பல முறை இந்த புத்தகத்தைப் பற்றி பேசியிருக்கிறேன். I Am a Cat - Natsume Soseki இந்த புத்தகத்தை MRTயில் பயணம் செய்யும் போது மட்டுமே வாசித்தேன்.பலவிதமான அனுபவங்கள் தந்த நாற்பது புத்தகங்கள் .
1)The Divine Comedy - Dante
2)The Stranger - Albert Camus
3)One Hundred Years Of Solitude -Gabriel Garcia Marquez
4)Crime and Punishment - Fyodor Dostoevsky
5)Things Fall Apart - Chinua Achebe
6)War and Peace - Leo Tolstoy
7)Maus - Art Spiegelman
8)The Brothers Karamazov - Fyodor Dostoyevsky
9)Anna Karenina - Leo Tolstoy
10)The Decameron - Giovanni Boccaccio
11)Atlas Shrugged by Ayn Rand
12)Gilead - Marilynne Robinson
13)I Am a Cat - Natsume Soseki
14)The Thief - Fuminori Nakamura
15)2666 - Roberto Bolano
16)Hopscotch - Julio Cortazar
17)The Tunnel - Ernesto Sabato
18)The Feast of the Goat - Mario Vargas Llosa
19)The Gift of Rain - Tan Twan Eng
20)Swann's Way - Marcel Proust
21)Pere Goriot - Honore de Balzac
22)The Unbearable Lightness of Being - Milan Kundera
23)Disgrace - JM Coetzee
24)The Name Of The Rose - Umberto Eco
25)My Name Is Red - Orhan Pamuk
26)The Trial - Franz Kafka
27)Blindness - Jose Saramago
28)Invisible Cities - Italo Calvino
29)Night - Elie Wiesel
30)Solaris- Stanisław Lem
31)The Rings of Saturn - WG Sebald
33)The Little Prince - Antoine de Saint-Exupery
34)Soul Mountain - Gao Xingjian
35)The Book of Disquiet - Fernando Pessoa
36)The Three-Body Problem - Cixin Liu
37)Season of Migration to the Nation - Tayeb Salih
38)Giovanni's Room - James Baldwin
39)The Scarlet Pimpernel - Baroness Orczy
40)Great Expectations - Charles Dickens
தமிழில் நாற்பது:
1)தாண்டவராயன் கதை -பா.வெங்கடேசன்
2)காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
3)உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார்
4)நீலகண்டம் -சுனீல் கிருஷ்ணன்
5)சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்
6)அஞ்ஞாடி - பூமணி
7)தீம்புனல் - ஜி. கார்ல் மார்க்ஸ்
8) ஆழி சூழல் - ஜோ .டி குருஸ்
9)வேனல் - காலப்பிரியா
10)பருக்கை - வீரபாண்டியன்
11)வலம் - விநாயக முருகன்
12)துறைவன் - கிறிஸ்டோபர் ஆன்றணி
13)ஜீவனாம்சம் - சி சு செல்லப்பா
14) உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
15)கரமுண்டார் வூடு - தஞ்சை பிரகாஷ்
16) கடல்புரத்தில் - வண்ண நிலவன்
17)கூகை - சோ.தர்மன்
18)சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன்
19)அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
20)காதுகள் - எம். வி. வெங்கட்ராம்
21)இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
22)ஒற்றன் - அசோகமித்திரன்
23)இடைவெளி - சம்பத்
24)கன்னி -பிரான்சிஸ் கிருபா
25)நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
26)பிறகு - பூமணி
27)கோவேறு கழுதைகள் - இமையம்
28)காடோடி - நக்கீரன்
29)வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராம்
30)சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
31)புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்
32)ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
33)காடு - ஜெயமோகன்
34)விசாரணைக் கமிஷன் -சா.கந்தசாமி
35)சாய்வு நாற்காலி -தோப்பில் முஹம்மது மீரான்
36)ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
37)விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - சி.மோகன்
38)ஆப்பிளுக்கு முன் - சி. சரவணகார்த்தியேன்
39)கருக்கு - பாமா
40)பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு
Very interesting variety of books. Keep it going Sasi! 👍
ReplyDeleteWow, can't admire with this list of books :) thank you bro, I've read a few,
ReplyDeleteSasi, I am really proud of you! You have gone through a number of books and their minds... Great! Keep doing it. God bless you... By Fr Maria Dellus.
ReplyDeleteSasi, Amazing list. please keep blogging. always looking forward to your posts about books.
ReplyDeleteGood
ReplyDelete