16-03-2021 09:00
கிழக்கு கடற்கரை பூங்கா
கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் வில்லியம் ஷேக்ஸ்பியரின் "Carpe Diem" கவிதைதான். நேற்று அலுவகத்தில் ஷேக்ஸ்பியரின் முழுப் படைப்பு புத்தகத்தைப் எடுத்துப் பார்த்தேன். அப்போது இந்த கவிதை உள்ள பக்கம் திறந்தது. இந்த புத்தகம் நான் ஜப்பான் சென்றபோது தங்கியிருந்த ஹோட்டலில் நான் இரண்டு புத்தங்களை வைத்துவிட்டு books exchange பகுதியில் இருந்து எடுத்து வந்தேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோக்கள் இருக்கும். அதை சிங்கப்பூருக்கு கொண்டுவதற்கு படாத பாடுபட்டேன்.அதை எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன்.இன்றைய ஓட்டம் முழுவதும் ஜப்பான் பயண நினைவிலேயே இருந்தது. அதிவிரைவு ரயில் , Sushi ,Sake ,Manga, Ghibli studio படங்கள் ,சுமோ ,ஐஸ் ஸ்கேட்டிங் ,Bento box ,Samurai இப்படி ஒவ்வொன்றும் ஞாபகத்தில் வந்து சென்றது. ஒரு மணி நேரம் ஓடி வீடு திரும்பினேன்
No comments:
Post a Comment
welcome your comments