23-02-2021 08:35
கிழக்கு கடற்கரை பூங்கா
கடுமையான வெய்யில். பேருந்து நிலையத்தில் இருந்து ஓட ஆரம்பித்தேன்.வாக்மேனில் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாட ஆரம்பித்தார். வீட்டிற்கு அருகில் ஒருவர் என்னைக் கை கட்டி நிறுத்தி "your specs is awesome" என்றார். நான் சிரித்தேன். அவர் "brand ?" என்று கேட்டார். நான் "Rudy Project" என்றேன். அவர் "Oh I never heard of it" என்றார். நான் "see you" என்று சொல்லிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தேன்.நான் அவரை காபி கடையில் சில தடவை பார்த்திருக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் கண்ணாடி போடுவதென்றாலே ஒருவிதமான கூச்சம் ஒட்டிக் கொண்டுவிடும். யாரும் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று எண்ணிக் கொண்டே ஓடுவேன். படிப்படியாக அது மாறி இப்போதெல்லாம் கண்ணாடி போடாமல் ஓடுவதே இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டேன். நான் வாங்கிய முதல் கண்ணாடி ஞாபகத்தில் வந்தது.அது இன்னும் என்னிடம் இருக்கிறது. எப்போதாவது போட்டுக் கொள்வேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்த போது சென்ற வாரம் பார்த்த பெரியவர் நடந்து வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்து சிரித்தார்.நானும் சிரித்தேன். பாடலில் கவனம் சென்றபோது "அடி ஆத்தாடி .." என்று ஜானகியும் இளையராஜாவும் பாடிக் கொண்டிருந்தனர். ஏனோ அப்போது நேற்றுப் பார்த்த இயக்குநர் ரத்னகுமாரின் பேட்டி ஞாபகத்தில் வந்தது. என்னத்த சொல்ல .. என்று எண்ணிக் கொண்டேன்.என் முன்னே ஓடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வேகத்தைக் அதிகரித்தார் நானும் அவருக்கு இணையாக ஓட வேண்டுமென்று முடிவு செய்து வேகத்தை அதிகரித்தேன். அவர் கிழக்கு கடற்கரை பூங்காவை விட்டு வெளியே செல்லும்வரை அவருக்கு இணையாக ஓடினேன். அதன் பிறகு மெயின் ரோட்டில் சைக்களின் பின்னல் ஓடி வீடை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments