டாக்ஸி ஓட்டுனருடன்
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று(27-01-2021) அலுவலகத்திற்கு சென்றேன்.மகனுக்கு பள்ளிக்கு நேரம் ஆகியதால் டாக்ஸி பிடித்து சென்றோம். ஓட்டுநர் ஒரு மலாய் சிங்கப்பூரர். என் அப்பாவின் வயதிருக்கும். பயணம் ஆரம்பித்தவுடனேயே ஓட்டுநர் என்னைப் பார்த்து "இந்தியரா?" என்று கேட்டார்."ஆமாம்" என்றேன்."நேற்று இந்திய செய்தி கேட்டிங்களா?" என்று கேட்டார்.நான் "கேட்டேன் ..என்ன ஆச்சு ?" என்றேன். அவர் "நேற்று ஒரு மாஜிஸ்திரேட் ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறார் படிச்சிங்களா?" என்று கேட்டார். நான் " அந்த சிறுமியின் sexual assault case-அ " என்று கேட்டேன். "அவர் "ஆமாம் அது தான்.. அதெப்படி இப்படி தீர்ப்பு சொல்ல முடியும் எனக்கு குழப்பமாக இருக்கு " என்றார்.|எனக்கும் தான்" என்றேன். "உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா" என்று கேட்டார். "ஆமாம் என் முதல் பிள்ளை பெண் தான்" என்றேன். "keep her safe and be careful" என்றார். நான் தலையை ஆட்டினேன். "உங்களுக்கு எப்படி இந்த தீர்ப்பைப் பற்றி தெரியும்" என்று கேட்டேன். அவர் "என் இந்திய நண்பர்கள் கோபத்தோடு என்னிடம் சொன்னார்கள்" என்றார்.
No comments:
Post a Comment
welcome your comments