23-01-2021 06:25
கிழக்கு கடற்கரை பூங்கா
வழக்கத்தைவிட இன்று சற்று தாமதாமாத்தான் ஓட ஆரம்பித்தேன். "பீமிஷா " என்ற வார்த்தைதான் எண்ணத்தில் வந்து கொண்டே இருந்தது . 'பீஷ்மா " என்ற தெலுங்கு திரைப்படத்தின் பெயரை கடந்த சில மாதங்களாக பீமிஷா என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். ஏனோ இந்த வார்த்தை பிடித்துவிட்டது.பாடலில் கவனம் சென்றபோது "அப்பணி தீயணி .." எஸ்பிபியும் ஜானகியும் .. இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் சிரஞ்சீவியின் நடனம் தான் மனதில் வரும்.இன்றும் அதுதான் நடந்தது.எதிரே இரண்டு பெரியவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் நேற்று வாசித்த இரண்டு கட்டுரைகள்தான் எண்ணத்தில் வந்தது. இரண்டும் காந்தியை பற்றியது .. அவரைப் போல ஒருவர் விமர்சிக்கபட்டது கிடையாது என்ற எண்ணம் தான் வந்தது. அவரின் கொள்கைகள் இன்றும் தேவைதான்..கவனம் எதிரே ஓடி வந்து கொண்டிருந்த சட்டை அணியாத ஓடும் குழுவின் மேல் சென்றது. இதுவரை நான் எந்த ஒரு குழுவுடன் சேர்ந்து ஓடியது கிடையாது. ஆனால் ஓடவேண்டுமென்ற ஆசை நான் ஓட ஆரம்பித்ததிலிருந்து இறக்குகிறது. குழுவுடன் ஓடுவது நம் திறனை மேம்படுத்தும். திரும்பி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தபோது "Fantasy Symphony - Berlioz " -ஐ ஓடவிட்டு என் ஓட்டத்தை தொடர்ந்தேன் ..வீட்டை அடையும் வரை Berlioz என்னை தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
No comments:
Post a Comment
welcome your comments