06-01-2021 8:31
உபியிலிருந்து வீடுவரை
மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்த உடனேயே நான் படித்துக் கொண்டிருக்கும் " Hacking Darwin - Jamie Metzl " புத்தகம்தான் எண்ணத்தில் தோன்றியது. அதற்கு காரணம் அந்த பள்ளியில் சிறுவர்கள் சிறுமியர்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக எனக்கு தோன்றியது. இந்த புத்தகம் அடுத்த 20-25 வருடங்களில் உயிரியலில் நடக்க இருக்கும் முன்னேற்றங்களைப் பற்றி பேசுகிறது. அதுவும் குழந்தைப் பிறப்பைப் பற்றி விரிவாக பேசுகிறது. இதுவரை படித்ததே கண்னை கட்டுகிறது. சிக்னலின் சிவப்பு விளக்கு என்னை ஓடிக் கொண்டிருக்கும் பாடலுக்குச் கவனத்தை இட்டுச் சென்றது . எஸ்பிபி "காதல் மகாராணி" பாடிக் கொண்டிருந்தார்.என்ன பீட் !ஏனோ சிறு வயதில் கேட்ட "Drum Beat" என்ற ஆல்பம் ஞாபகத்தில் வந்தது. முதல் சிக்னலைக் கடந்தவுடன் அடுத்த சில நொடிகளில் இரண்டாவது நிறுத்தம். நின்றேன். மீண்டும் ஓட ஆரம்பித்தபோது எண்ணத்தில் Willaim Carlos Williams எழுதிய " The Red Wheelbarrow " என்ற கவிதை வந்தது. சம்பந்தமே இல்லாமல் இந்த கவிதை ஏன் எண்ணத்தில் வந்ததென்று தெரியவில்லை. கவிதையை இருமுறை சொல்லிப் பார்த்தேன்.இப்போது வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.யூனோஸ் பேருந்து நிலைய food court-ல் நின்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தேன். அந்த வளைவில் திரும்பும்போது கேன் வில்லியம்சன் எண்ணத்தில் வந்தார். அவரின் பேட்டிங்கை கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பார்த்தேன். சமீபத்தில் நான் மிகவும் ரசித்த பேட்டிங் இவருடையது தான். கிரிக்கெட் வீரர்களுக்கு இவர் ஒரு முன்மாதிரி. இன்று அவர்கள் பாகிஸ்தானை ஆல் அவுட் செய்வார்கள் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments