23-09-2020 08:45
உபியில் இருந்து வீடு வரை
கடுமையான வெய்யில்.ஓடுவதற்கு முன்பே அது என்னை அச்சுறுத்தியது. மெதுவாக ஓடவேண்டுமென்று முடிவெடுத்து ஓட ஆரம்பித்தேன்.வாக்மேன் இன்றும் வேலை செய்யவில்லை. ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது "inter-disciplinary' என்ற வார்த்தைகள்தான். இன்றைய சூழலில் எந்த ஒரு வேலைக்கும் இது அவசியம். ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பது நல்லது ஆனால் அதை சுற்றியுள்ள துறையில் அறிமுகம் இல்லை என்றால் வேலையில் நிலைத்து இருப்பது மிகவும் கடினம். நான் செய்த வேலைகளை யோசித்துக் கொண்டே ஓடினேன். நான் programmar-ஆக வேலையைத் தொடங்கினேன். ஆனால் என் boss நீ one dimention-அ சிந்திக்கக் கூடாது .நீ செய்வது ஒரு பகுதி என்றாலும் ஒரு ப்ராஜெக்ட் செய்தால் அதில் உள்ள அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தொடக்கத்திலேயே சுதந்திரம் கொடுத்தார். அதுவே எனக்கு பல துறைகளின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள உதவியது. எனக்கும் அந்த அணுகுமுறை புடித்து. எனக்கு சம்பந்தமே இல்லாத பல துறைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments