நான் திரைப்படங்களை யார் நடித்திருக்கிறாரகள் என்று தெரிந்த பின்புதான் அந்த படத்தைப் பார்ப்பேன். சிங்கப்பூர் வருவது வரை அப்படித்தான் ஆனால் இங்கு வந்த பிறகு பிற மொழிப் படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மற்றும் திரைப்படங்களை கூர்ந்து கவனிக்கும் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் வந்தது. மற்றொரு முக்கிய மாற்றம் திரைப்படங்களைப் பற்றி புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் படிக்க ஆரம்பித்தது.சிங்கப்பூர் நூலகத்தில் சினிமா பற்றிய நிறைய புத்தங்கள் இருக்கின்றன. "Sight & Sound" மாத இதழ் தான் என்னை உலக சினிமாவிற்கு அறிமுகப் படுத்தியது. "The New Yorker" வாரந்திரியில் வரும் சினிமா விமர்சனங்கள் என் நடிகர்கள் சார்ந்த ரசனையை கேள்விக்குள்ளாக்கியது. இப்படி சினிமா பற்றி வாசிக்க வாசிக்க நான் சினிமா விமர்சனம் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். ஒரு சினிமாவை நல்ல இருக்கு நல்ல இல்ல என்ற இரண்டு வகைக்குள் நிறுத்துவது என்னை பொறுத்தவரை சரியானதில்லை. இந்த கொரோனா நாட்களில் எனக்கு பிடித்த ஆசிய இயக்குநர்களின் திரைப்படங்களை மீண்டும் பார்த்தேன். எனக்கு பிடித்த ஆசிய இயக்குநர்கள் கீழே:
என்னை மிகவும் கவர்ந்த இயக்குனர்களில் முதன்மையானவர் ஹயாவ் மியசாகி (Hayao Miyazaki). இவர் ஒரு animator . மாங்கா (manga) வகை ஜப்பானிய திரைப்படங்களை உருவாக்கியவர். 2005 வரை அவர் உருவாக்கிய அனைத்து படங்களும் என்னிடம் டீவிடியில் இருந்தது. இவரின் படங்கள் என் கனவில் பல நாட்கள் தொடர்ச்சியாக வந்துள்ளது. நான் மீண்டும் மீண்டும் செல்லும் ஒரு இயக்குநர். சமீபகாலமாக என் மகளுக்கு இவரின் படங்கள் பிடித்துவிட்டது. கொரோனா நாட்களில் இவரின் படங்கள் பெரும் விடுதலை.ஒரு தடவை பார்த்தோம் என்றால் மீண்டும் நம்மை அந்த மாயாஜால உலகுக்குள் கொண்டு செல்லும் தன்மை கொண்டவை இவரின் படைப்புகள்.
எனக்கு பிடித்த மற்றொரு ஜப்பானிய இயக்குநர் யசுஜிரோ ஓஸு (Yasujiro Ozu). இவருடைய "Noriko Trilogy" படங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்கள். ஒரு குடும்பத்தின் கதையை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார். அதிலும் "Tokyo Story" ஒரு மைல் கல். இவரின் படங்களில் ஒளிப்பதிவு மற்றொரு சிறப்பம்சம். ஒவ்வொரு நடிகரின் உணர்ச்சிகளை எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார். உண்மையில் இவர் படங்களில் ஒவ்வொரு பொருளும் இடமும் கதையை நகர்த்திச் செல்லும். ஒரு காட்சியில் இருக்கும் அனைத்தும் நமக்கு கதை சொல்லும்.
தைவான் இயக்குநர் ஹௌ சியாவ் சியின் (Hou Hsiao Hsien)படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.இவரின் ஒரு சில படங்களைத் தவிர மற்ற அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறேன். சாதாரண தினசரி நிகழ்வுகளை மிக அழகாக தன் படங்களில் வெளிப்படுத்தியவர்.மற்றொரு அம்சம் நிறைய uncut நீள காட்சிகள் இருக்கும். இவரின் படங்களை தொடர்ச்சியாக பார்த்தால்தான் நமக்கு புரியும். "The Puppet Master" மற்றும் "The Assassin" அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள்.
நூரி பில்ஜ் சிலான் (Nuri Blige Ceylan) ஒரு துருக்கிய இயக்குநர். சென்ற வருடம் தான் இவரின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் தான் இவரின் பெருபான்மையான படைப்புகள் நிகழ்கின்றன. இவரின் கதைகள் மனிதனின் தினசரி வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும். தலைமுறைகளுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் அதன் பிரச்சனைகள் இப்படி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்தான் இவரின் கதைகளின் பிரதானம். இவரின் படங்களில் இசையும் அமைதியும் இரு தூண்கள். இவர் இந்த லிஸ்டில் வருவது சரிதான் சென்று எனக்கு படுகிறது. துருக்கி ஒரு ஐரோப்பிய நாடு.
ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவாவின் (Akira Kurosawa) திரைப்படங்களை பற்றி நான் என்ன சொல்ல. "ரஸமோன்" தெரியாமல் சினிமா ரசிகர் என்று ஒருவர் சொல்லிவிட முடியாத அளவுக்கு திரைப்பட வரலாற்றில் அது ஒரு முக்கியமான படம்.நான் இன்னும் இவரது அனைத்து படங்களையும் பார்க்க வில்லை. இவரின் விடுபட்ட படங்களையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
கொரியன் இயக்குநர் கிம் கி டுக்கின் (Kim Ki-duk ) படங்கள் வேறொரு வகையான அனுபவத்தைக் கொடுக்கும். இவரின் படங்களில் பெரும்பாலும் கதாபாத்திரங்கள் "sadomasochistic". இந்த வார்த்தையை நான் கூகிளில் தேடி கண்டுபிடித்தேன்.இவரின் படங்களில் புத்த மத குறியீடுகள் காட்சிகளில் வந்து கொண்டே இருக்கும் ஆனால் அதன் விளைவுகள் சரியாக கையாளப்பட்டுள்ளதா? என்பது கேள்விக் குறிதான். இருந்தாலும் இவரின் படங்களையும் அவசியம் பார்க்க வேண்டும்.
ஈரானிய இயக்குநர்கள் சிலரையும் எனக்கு பிடிக்கும் ஆனால் இந்த கொரோனா நாட்களில் அவர்களின் படங்களைப் பார்க்கவில்லை. ஸ்ரீலங்காவின் பிரசன்ன விதானகேவின் படங்களையும் பார்க்க வேண்டும். ஹாலிவுட் மோகத்திலிருந்து வெளியே வந்தால் ஒரு பெரிய திரைப்பட உலகம் நமக்காக காத்திருக்கிறது.

No comments:
Post a Comment
welcome your comments