Thursday, April 2, 2020

ரன்னிங் டைரி -84

02-04-2020 08:00
வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை பூங்கா வரை

வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் உணர்ந்தது வெய்யிலைத் தான். கடுமையான வெயில். ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது டிராட்ஸ்கி மருது அவர்களின் பேட்டிதான். அருமையான ஒன்று. சென்ற வாரம் என் மகளுக்கு லியோனார்டோ டாவின்சியை அறிமுகப் படுத்தினேன். அவளுக்கு அவரது கதை பிடித்து விட்டது. இந்த வாரம் அவரின் ஓவியங்களை அவளுக்கு காட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தேன். பூங்கா ஓடுபவர்களால் நிறைந்திருந்தது.  கரையில் "otters" விளையாடிக் கொண்டிருந்தன. சற்று நேரம் நின்று அவற்றை ரசித்தேன். மீண்டும் வீட்டுக்கு  திரும்பி ஓட ஆரம்பித்தேன். ஏனோ மனதில் பீத்தோவனின் ஐந்தாம் சிம்பொனி ஓட ஆரம்பித்தது. மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.  ரசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments:

Post a Comment

welcome your comments