16-02-2020 15:45
கிழக்கு கடற்கரை பூங்காவில்
மழை மேகம். ஓட ஆரம்பித்தபோது விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் நினைவில் வந்தது. 2005 பிறகு நான் விஜய்யின் எந்த திரைப்படத்தையும் எதிர்பார்த்து காத்திருந்ததில்லை ஏனோ அவரின் திரைப்பாடல்களை அதற்கு பிறகு எனக்குப் பெரிதாக பிடித்ததில்லை. ஆனால் இந்த பாடல் எனக்கு கேட்டவுடன் பிடித்து போய்விட்டது. ஓடி பத்து நிமிடம் இருக்கும் கடும் வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. பலர் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்கு பெரும் மகிழ்ச்சி. மக்களை பார்த்துக் கொண்டே ஓடினேன். மூவர் சிறு சில்வர் குண்டுகளை வைத்துக் கொண்டு எதோ விளையாடிக் கொண்டிருந்தனர். நான் நின்று விட்டேன். இந்த விளையாட்டை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு அருகில் இது தான் முதல் முறை. கிட்டத்தட்ட பத்து நிமிடம் அங்கேயே நின்றேன். பிறகு மீண்டும் ஓட ஆரம்பித்தபோது நேற்று இரவு வாசித்து முடித்த "வேனல்" புத்தகம் நினைவில் வந்தது. அந்த நாவலின் கதையை எண்ணிக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.

No comments:
Post a Comment
welcome your comments