19-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை
நேற்று ஓடவில்லை .ஞாயிறு இரவு முழுவதும் அலுவலக வேலை. ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது இரண்டு விசயங்கள். முதலாவது "Why the slowdown is in the Mind " என்று தலைப்பில் விவேக் கவுல் எழுதிய கட்டுரைதான். கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் தொய்வு. விவேக் கவுல் ஒவ்வொரு துறையாக அலசுகிறார். எக்கனாமிக்ஸ் தெரியாத எனக்கே ஓரளவு இந்த கட்டுரை புரிந்தது. என்னதான் அரசு செய்து கொண்டிருக்கிறது?! அவர் கூறுவது போல slowdown சென்று சொல்லியே slowdown ஆகியது என்று ஒருசில துறைகளைத் தான் சொல்லமுடியும்.
இரண்டாவது "The Telecom Tain Wreck" என்ற தலைப்பில் நவதா பாண்டே எழுதிய கட்டுரை. ஒரு துறையை எப்படியெல்லாம் வழிநடத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தியா டெலிகாம் இண்டஸ்ட்ரி தான். எப்படி அடுத்தடுத்து அரசுகள் தவறு மேல் தவறு செய்திருக்கிறார்கள் .இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இத்துறை ஒரு எடுத்துக்காட்டு. இந்த இரண்டு கட்டுரைகளும் mint asia பத்திரிக்கையில் வந்துள்ளது. இந்த பத்திரிக்கையை முழுவதும் வாசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.
No comments:
Post a Comment
welcome your comments