19-09-2019 17:30
கிழக்கு கடற்கரை பூங்கா
இன்று அலுவலகம் செல்லவில்லை. மகளுக்கு சிங்கப்பூர் பள்ளியில் சேர நடக்கும் நுழைவு தேர்வு இன்று. தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் walkman-ஐ எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். லேசாக வெய்யில் அடித்தது. ஓட ஆரம்பித்ததிலிருந்து அந்த நுழைவுத்தேர்வுப் பற்றியே எண்ணம். பிள்ளைகள் எக்ஸாம் ஹாலை விட்டு வெளிய வந்தவுடன் பெற்றோர்கள் அவர்களை கேள்விகளால் துளைத்து எடுத்தனர். எனக்கு ஏனோ கோபம்.இந்தியாவின் அனைத்து மொழிகளையும் அங்கு கேட்டேன். நான் என் மகளிடம் "had fun?" என்று கேட்டேன். அவளும் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள். அதன் பிறகு அவளிடம் அந்த தேர்வைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
திடீரென்று எதிரே வருபவர் தெரிந்தவர் மாதிரி தெரிந்தது. ஆம் தெரிந்தவர்தான். எங்களோடு கைப்பந்து விளையாட வருபவர். ஹலோ சொல்லிவிட்டு ஓடிச்சென்றேன். எண்ணங்கள் அப்படியே கைப்பந்து மேல் சென்றது. பாம்பனில் கைப்பந்து விளையாடுவது ஒரு பெரும் அனுபவம். விளையாடுபவர்கள் அனைவரும் என் உறவினர்கள்தான் ஆனால் அதட்டலும் கெட்ட வார்த்தைகளும் அனல் பறக்கும். அந்த மைதானமே ஒரு திகில் தரக்கூடியது .volleyball court தவிர மற்ற இடங்கள் எல்லாம் மலம் தான். மலத்தில் படாமல் பந்தைப் துரத்துவத்துவதிலேயே tired-ஆகி விடுவோம்.அங்கிருந்து மாறி ஆலமர திடலுக்கு மாறினோம். அங்கு காற்றோடு விளையாடியதுதான் அதிகம். அது ஒரு அழகிய நிலாக் காலம். அப்படியே நினைவு பாட்டில் திரும்பியபோது "The Litany of the Saints" ஓடிக் கொண்டிருந்தது. அந்த அமைதியிலேயே வீடு திரும்பினேன்.

No comments:
Post a Comment
welcome your comments