Tuesday, June 11, 2019

Strange Weather in Tokyo - Hiromi Kawakami


If the love is true, then treat it the same way you would a plant- feed it, protect it from the elements- you must do absolutely everything you can. But if it isn’t true, then it’s best to just let it wither on the vine.
மற்றொரு அழகிய ஜப்பானிய நாவல். அது என்னவோ தெரியல ஜப்பானிய நாவல்கள் என்றால் எனக்கு தனி விருப்பம்.புத்தகக் கடையில் இந்த புத்தகத்தின் அட்டை என்னை மிகவும் கவர்ந்தது. உடனே வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.  இது சுசிக்கோ என்ற பெண்ணுக்கும் அவளது பள்ளி ஆசிரியருக்கும் இடையே நடக்கும் கதை. இருவரும் bar-ல் சந்திக்கிறார்கள். அடிக்கடி சந்திக்கிறார்கள்.சுசிக்கோ திருமணமாகாதவள்.  தனக்கென்று ஒரு வீட்டில்  ஓரளவு  வாழ்வை திருப்திகரமாக வாழ்ந்து கொண்டிருப்பவள். பள்ளி ஆசிரியர் (sensei ) ஓய்வு பெற்றவர்,அவரும் தனியாக வாழ்கிறார்.  எப்போதும் கையில் ஒரு briefcase வைத்திருப்பார்.ஒரு ரசனையான மனிதர் .எதையும் ரசித்து ருசித்து அனுபவித்து செய்பவர்.
Everyone causes trouble for someone at some point in their lives.
இந்த இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வாறு தெரிந்து புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்த புத்தகத்தின் கதை.இருவருக்கும் பல விசயங்களில் ஒரே மாதிரியான ரசனை. கதை நிகழும் இடம் டோக்கியோ மற்றும் சுற்றுப்புறம். முக்கியமான இடம் அந்த bar. மிக சில வரிகளில் மிக அழகாக இந்த இடங்களை ஹிரோமி விவரித்துள்ளார்.சுசிக்கோ  பல முறை பல விசயங்களை பேச நினைத்து பேசாமல் போகிறாள்.ஆசிரியரோ தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசமாட்டார்.
If not kept in check, night-time thoughts are prone to amplification.
 இருவரும் கதை முழுவதும் எதேட்ச்சையாகத்தான் சந்தித்துக் கொள்கிறார்கள் . சுசிக்கோ தன்னை அறியாமல் ஆசிரியரிடம் மிகவும் நெருக்கமாகிறாள். அவளுக்கு ஒருசில ஆண்களோடு உறவிருந்தது ஆனால் எதுவும் திருமணம் வரை செல்லவில்லை. ஆசிரியரோடு பழகும் போது அவளோடு படித்த ஒருவனோடு தொடர்பு ஏற்படுகிறது.அவனோடு இருந்தாலும் அவளுக்கு ஆசிரியரின் நினைப்பே வருகிறது. அவளே பல கேள்விகள் கேட்டுக்கொள்கிறாள். அவளோட தனிமைதான் இந்த உறவுக்கு காரணம் என்று நான் நினைக்கின்றான்.ஆசிரியருக்கோ(sensei) அவளை பற்றி அப்படி எண்ணம் இல்லை. அவர் தனது மனைவின் வாழ்கைப் பற்றி கூறுகிறார்.
It seemed as if we had ended up in a time that didn’t exist anywhere.
அனைத்தையும் இருவரும் தெரிந்து கொண்டபின்னர் அவர்கள் "official relationship "என்று தங்களின் உறவை சொல்லிக்கொள்கிறார்கள்.சில ஞாபகங்கள் சில எதிர்பார்ப்புகள் என்று அவர்களின் நட்பு அப்படியே தொடர்கிறது.ஒரே அமர்வில் படிக்கக்கூடிய புத்தகம். மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .கதை அப்படியொன்றும் புதிதானது இல்லைதான் ஆனால் சொல்லிய விதம்தான் சிறப்பு. ஒரு மெல்லிய புன்னையுடன் வாசிக்கக்கூடிய புத்தகம். அங்கங்கே ஹைக்கூ கவிதைகள் கதைக்கு மேலும் அழகு.கதையின் மற்றொரு சிறப்பு அதில் வரும் உணவைப் பற்றிய விவரிப்பு.
Even a cracked pot has a lid that fits.
வாசிக்கலாம்.

No comments:

Post a Comment

welcome your comments