Tuesday, September 18, 2018

பெரும் சாதனை .. எலியட் கிப்சோகே (Eliud Kipchoge)!


நான் மிகவும் எதிர்பார்த்த மரத்தான் பந்தயம் இந்த வருட பெர்லின் மரத்தான்தான் அதற்கு காரணம் எலியட் கிப்சோகே. மரத்தான் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னரே உலக சாதனைப் பற்றிய பேச்சுக்கள் தொடங்கின அது மேலும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. Nike-ன் இரண்டுமணிக்குள் மரத்தான் பந்தயத்தில் முதலாவதாக வந்தவர்தான் இந்த எலியட் கிப்சோகே. அது மட்டும் அவரது சாதனை அல்ல. இவர் பங்கேற்ற 11 மராத்தானில் 10ல் முதலிடம். இப்போது பல நிபுணர்கள் இவரே அகச் சிறந்த மரத்தான் வீரர் என்கின்றனர்.
Only the disciplined ones in life are free. If you are undisciplined, you are a slave to your moods and your passions - Kipchoge
எலியட் கிப்சோகே கென்யா நாட்டுக்காரர். நான்கு பிள்ளைகளில் இவரே கடைசி.அம்மா ஒரு ஆசிரியை . தந்தையை சிறு வயதிலேயே இழந்தவர். பள்ளிக்கு தினமும் ஓடியே சென்றார். மற்ற நேரங்களில் பால் விற்று தன்னால் முடிந்த பொருளாதார பங்களிப்பை குடும்பத்திற்கு வழங்கினார். தனது பதினாறாவது வயதில் பேட்ரிக் சங் (Patrick Sang) என்ற பயிற்சியாளரை சந்தித்து தனது ஆர்வத்தை தெரிவித்தார். பேட்ரிக் சங் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் . பேட்ரிக் சங் கிப்சோகேவிற்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அவர்களது கூட்டணி இன்றும் தொடர்கிறது.

எலியட் கிப்சோகே பலமுறை உலக சாதனையை நூலிலையில் தவறவிட்டவர்.இந்த சூழ்நிலையில்தான் பெர்லின் மரத்தானில் மீண்டும் தான் பங்கேற்கப் போவதாக அறிவித்தார்.அப்போதே ரசிகர்கள் இது எலியட் கிப்சோகேவின் உலகசாதனை முறை என்றனர். எதிர்பார்த்தது போல எலியட் கிப்சோகே உலக சாதனை புரிந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அவர் எடுத்துக்கொண்ட நேரம்  - 2:01:39 (மனுசன் மெஷின் மாதிரி ஓடிருக்காப்ல ). இதில் மேலும் ஆச்சிரியமென்றால் இறுதி 17 கிலோமீட்டர் அவர் ஒருவரே தனியாக ஓடியதுதான். அவரோடு எந்த
pacemaker-ம் ஓடவில்லை.  Pacemakers என்பவர்கள் முன்னிலையில் இருக்கும் வீரர்களுக்கு ஊக்கம் தருவதற்காக அவர்களுடைய வேகத்திலேயே சில கிலோமீட்டர்கள் ஓடுபவர்கள். வெவ்வேறு வேகத்திற்கு வெவ்வேறு pacemakers உண்டு. கீழே எலியட் கிப்சோகேவின் பெர்லின் மரத்தான் ஐந்து கிலோமீட்டர் split :

தூரம்          நேரம் எடுத்துக்கொண்டது              மொத்த நேரம்
5km                        14:24                                   14:24
10km                        14:37                                   29:01
15km                        14:36                                   43:37
20km                        14:19                                   57:56
21.0975km                  3:10                                1:01:06
25km                       14:28                                1:12:24
30km                       14:21                                1:26:45
35km                       14:16                                1:41:01
40km                       14:31                                1:55:32
42.195km                   6:07                                2:01:39

அதாவது ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டரைக் கடப்பதற்கு கிப்சோகே எடுத்துக்கொண்டது சராசரியாக 14:24:90 நிமிடங்கள்(!). மேலேயுள்ள புள்ளிவிவரத்தில் மற்றொன்று முக்கியமானது அவர் இரண்டாது பாதியை முதல் பாதியைவிட விரைவாக கடந்தது. இதற்கு முந்திய உலக சாதனை நேரம் 2:02:57 . டெனிஸ் கிமெட்டோ என்பவரால் 2014 பெர்லின் மரத்தானில் நிகழ்த்தப்பட்டது.இப்போது அதை கிப்சோகே 2:01:39-ஆக குறைத்துள்ளார். அதாவது முந்தையதை விட 78 வினாடிகள் குறைவு. இந்த மாதிரி உலக சாதனைகளுக்கிடையே  பெரிய வித்யாசம் வருவது 1967-ற்கு பிறகு இப்போதுதான்.

இந்த பெர்லின் மரத்தானைப் பொறுத்தவரை சிறப்பு என்னவென்றால்  கிப்சோகே எந்த திட்டமுமின்றி ஓடியதுதான். எனக்கு அப்படிதான் படுகிறது. ஏனென்றால் தொடக்கமுதல் இறுதிவரை அவரின் வேகம் குறையவே இல்லை. ஒரு இடத்தில் கிப்சோகேவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை மற்றும் படிப்படியாக pacemakers-சும் ஒருவர்பின் ஒருவராக நின்றுவிட்டனர்.இருந்தும் கிப்சோகே எந்த சலனமும் அடையாமல் ஓடினார் அவரது ஒரே எதிரி நேரம்தான். அவர் சோர்வடைந்ததற்கான எந்த அறிகுறியும்(தோல்பட்டை சுருங்குவது, கால்கள் தடம் மாறுவது ) இல்லாமல் இறுதிக் கோட்டைக்  கடந்தார் . கடந்த பிறகும் நிற்காமல் ஓடி தனது பயிற்சியாளரை கட்டித் தழுவினார். அந்த புகைப்படம் ஒரு ஆவணம் .இனி வரும் வீரர்களுக்கு அது ஊக்கத்தைக் கொடுக்கும்.
Only the disciplined ones are free in life. If you are undisciplined you are a slave to your emotions and your passions - Eliud Kipchoge
எலியட் கிப்சோகே ஒரு தேர்ந்த வாசகர்.அவர் பேசும்போது பல குறிப்போடு பேசுபவர்.தனது ஒவ்வொரு நாள் பயிற்சியையும் எழுதிவைத்துக் கொள்பவர்.தற்போது அவரிடம் பதினைந்து பயிற்சி ஏடுகள் உள்ளன. வருடத்திற்கு ஒன்று . ஆம் அவர் பயிற்சி ஆரம்பித்து பதினைந்து வருடங்களாகின்றன. அவருடைய ஒரு பதிவு  "Motivation + Discipline = Consistency".
இதுவரை கிப்சோகே எந்த ஒரு ஊக்கமருந்து விசயங்களில் சிக்கதாவர். அவ்வாறே வருங்காலத்திலும் இருப்பார் என்று நம்பூவோம்.

பெர்லின் மரத்தான் முடிந்த பிறகு கிப்சோகே கொடுத்த பேட்டியில் வளரும் மரத்தான் வீரர்களுக்கு அவர் கூறிய அறிவுரை  "Of course, training is important. But more important is the passion you put in it. You have to strongly believe that you are able to make it and be able to run this distance. That’s the magic of a marathon."  ஆம் மரத்தான் என்பது ஒரு மேஜிக் தான்.

இந்த சாதனை கொண்டாட பட  வேண்டியது. கொண்டாடுவோம் .

No comments:

Post a Comment

welcome your comments