இந்த புத்தகத்தைப் வசித்து முடித்தவுடன் ஒரு விதமான பயம் என்னை பற்றிக் கொண்டது. எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது ஒரு மிக பெரிய கேள்விக்குறி. இந்த புத்தகத்தை வாசிக்கும்போது நமது பள்ளிகளும் கல்லூரிகளும் நமது பிள்ளைகளை எதிர்காலத்திற்கு சரியாக தயார் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. இந்த கேள்விக்கு பதில் 100% இல்லை என்றுதான் ஆனால் எவ்வளவு தூரம் பின்னே இருக்கிறோம் என்பதுதான் பயமாக இருக்கிறது.
The astonishing wealth and comfort we have achieved in modern civilization are a direct result of the forward march of technology––and the relentless drive toward ever more efficient ways to economize on human labor has arguably been the single most important factor powering that progress. It’s easy to claim that you are against the idea of too much automation, while still not being anti-technology in the general sense. In practice, however, the two trends are inextricably tied together.ரோபோக்கள் மற்றும் தொழில்நூட்ப வளர்ச்சியை எப்படி எதிர்கொள்வதென்றால் அடிப்படைகளை மறுசீரமைத்தல் (fundamental restructuring) மூலம் என்கிறார் ஆசிரியர். எதிர்கால trends-ஐ கணிப்பது கடினமாகிக்கொண்டே இருக்கிறது ஏனெனில் அறிவியல் மற்றும் தொழில்நூட்ப வளர்ச்சி வெகுவிரைவாக மாறிவருகிறது என்று சிங்கப்பூரில் நடந்த பிக் டேட்டா (Big Data) மாநாட்டில் பல அறிஞர்கள் கூறினார்கள். இது மிகவும் முக்கியமான விசயம் ஏனென்றால் அரசின் பல்வேறு செயல்திட்டம் இந்த கணிப்பை பொறுத்துதான் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை எனக்கு தெரிந்து கல்வியில் குறிப்பிடத்தக்க (அவசிய) மாற்றம் வந்ததாக தெரியவில்லை . அரசும் அரசியல்வாதிகளும் பழங்காலத்திலேயே தங்கிவிட்டார்கள்.
"வேலையில்லா எதிர்காலம்" உருவாகுமா ? என்ற கேள்விக்கு ஆசிரியர் கூறுவது அது சாத்தியம் என்று அதை அவர் பல புள்ளிவிவரங்கள் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் கூறும் புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்தது. ஆனால் வெகுவிரைவில் அது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். முதலில் அழிவது "routine" வேலைகள் அதாவது தினசரி ஒரே மாதிரி (same flow) பணிகள் செய்யும் வேலை. பல்லாயிரம் clerical வேலைகள் காணாமல் போகும். இப்போதே தொழிற்சாலைகளில் பல வேலைகளை இயந்திரங்கள்தான் பார்க்கின்றன இனி மேலும் இயந்திரங்களின் பங்கு அதிகரிக்கும். அதுபோல வழக்கறிஞர்கள் , ஆராய்ச்சியாளர்கள் , சாப்ட்வேர் டிசைனர்கள் மற்றும் பல மருத்துவ வல்லுநர்கள் வேலை குறையும். அது மட்டுமல்லால் இன்னும் பத்து வருடங்களில் 90% செய்தி கட்டுரைகள் சாப்ட்வேரால் எழுதப்படும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது - இது நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்களுக்கு வேலையில்லாமல் செய்யும். ஓட்டுநரில்லா வண்டிகள் பல்லலாயிரம் ஓட்டுனர்களை பாதிக்கும்.
மனித இனம் இயந்திர வளர்ச்சிக்குகேற்ப தாங்கள் வேலை செய்யும் முறையை மாற்றி படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது அதுபோல் இந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு செயல்படுமா என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் மிக பெரிய கேள்வி . ஏனென்றால் இந்த (ரோபோ ,செயற்கை நுண்ணறிவு ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்கின்றது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் மிகவும் வேகமா நிகழ்ந்து வருகிறது. பெருளாதார வல்லுநர்கள் இந்த மற்றும் விவசாய புரட்சி போலத்தான் என்கிறார்கள். ஆனால் ஆசிரியர் இந்த தொழில்நுட்பப் புரட்சி சற்று வித்தியாசமானது ஏனென்றால் இந்த மாற்றங்கள் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது என்கிறார். அதற்கு அவர் கூறும் சில புள்ளிகள் :
- குறையும் வேலைவாய்ப்பு (New job creation)
- பெருகும் சமத்துவமின்மை
- சம்பள உயர்வில் தேக்கம்
- ஜிடிபியில் (GDP) குறையும் தொழிலார்கள் பங்கு
- ஜிடிபியில் (GDP) பெருகும் கார்பொரேட் லாபம்
இதனால் வரும் பிரச்சனைகளுக்குத் ஆசிரியர் கூறும் தீர்வு - (Guaranteed Basic Income) அனைவருக்கும் அடிப்படை வருமானம் அதாவது ஒருவர் வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு அவருக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட பணம் கொடுப்பது. இதைப் பற்றி இப்போதே பல நாடுகள் ஆராய தொடங்கிவிட்டன. அனைவருக்கும் அடிப்படை வருமானம் தீர்வாகாது என்று பல பொருளாதார வல்லூநர்கள் கூறுகிறார்கள். காலம்தான் பதில் சொல்லும்.
The promise of education as the universal solution to unemployment and poverty has evolved hardly at all. The machines, however, have changed a great deal.நமது தற்போதையக் கல்விமுறையைக் கொண்டு எதிர் காலத்தில் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம். மதிப்பெண்களை பிரதானப்படுத்தும் முறை மாற வேண்டும். சிங்கப்பூரில் நடந்த கல்வியாளர்கள் கூட்டத்தில் எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய பதில் தனித்திறன்தான் ஒருவனுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்று. மாணவர்களின் திறமையை அறிந்து அதற்கேற்ப அவர்களை வருங்காலத்திற்கு தயார் படுத்துவதே நமது பள்ளிகளும் கல்லூரிகளும் செய்ய வேண்டியவை.
ஐ டி துறையில் அடுத்த சில வருடங்களுக்கு கீழே குறிப்பிட்ட பகுதியில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது :
- Data Scientist (Python, Hadoop, R, SQL)
- Machine Learning & AI (Python, OpenAI )
- Healthcare ( EMR, PACS, HL7 )
- Security Analyst
ஐ டி துறையைப் பொறுத்தவரை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் , இல்லையெனில் விரைவில் பின்னுக்குத் தள்ளப்படுவோம்.
மார்ட்டின் போர்ட் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் பல வருட அனுபவமுள்ளவர். பல கருத்துக்களை மிக எளிய முறையில் விளக்கியுள்ளார். இந்த புத்தகம் 2015-ம் ஆண்டிற்கான சிறந்த பிசினஸ் புத்தகமாக தேர்வுசெய்யப்பட்டது . அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
March For Science India
மாணவர்களின் திறனைக் கூட்டுங்கள்
No comments:
Post a Comment
welcome your comments